இரத்தம் படிந்த கற்குவியல்களை வைத்து என்ன செய்ய போகிறாய்?
Updated: Jul 29, 2022

ஒருவன் திரும்ப கல் வீசவில்லை என்றால் கற்களுக்கு பஞ்சம் என்று அர்த்தமில்லை காயப்படுத்தி தன்னை சாயப்படுத்திக்கொள்ள விருப்பம் அற்றவனாகக்கூட இருக்கலாம். கற்களுக்குப் பஞ்சமில்லை யார் வேண்டுமென்றாலும் எடுத்து வீசலாம் அந்தப் பக்கம் அதிகம் இந்தப் பக்கம் குறைவு என்பதெல்லாம் சும்மா பேச்சு கற்கள் வீசுவதால் காயங்கள் மட்டுமே மிஞ்சும் இரத்தம் படிந்த கற் குவியல்களை வைத்து என்ன செய்ய போகிறோம் மாற்றம் வேண்டும் என்று உனக்கு உண்மையில் நாட்டம் இருந்தால் நீ வாட்டமாக ( நோகாமல் ) கல் வீசுவதை விடுத்து உன் ஆக்கப்பூர்வமான அறிவோடு அன்பு கலந்து நீ எதிர் பார்க்கும் மாற்றத்தை செயல் வடிவமாக்கு உன் மேல் கல் விழுந்தால் விலகிச் செல் பூவுலகமே இருக்கிறது உன்னை தழுவிக்கொள்ள சிதறி உடையும் கற்களுக்கு மதிப்பில்லை காயப்படுத்தும் கற்களுக்கு மதிப்பே இல்லை -- ஸ்டெல்லா இசக்கிராஜ்