வரலாற்று பேருந்தில்
பயணிக்கும் நண்பர்களே
உங்கள் நிகழ்கால
நம்பிக்கையை
வலுசேர்க்கும்
நிறுத்தங்களில் மட்டும்
இறங்கி
சத்தியம் சத்தியம் என்று
கோஷம் போடா வேண்டாம்
குறைந்த பட்சம்
முதல் மனிதன் நிறுத்தம் வரை
பயணியுங்கள்
அத்துணை மனிதனும்
உறவுதான் என்று உரக்க
சொல்லும்
சத்தியம் சத்தியம்