கால் தடம்

கால் தடம்

ஸ்டெல்லா இசக்கிராஜ்·SATURDAY, JUNE 2, 2018·

விஷம் ஏந்தும்

பாம்பின் தடம்

தவறில்லை

அதில் விஷமில்லை

சேற்றில் விளையாடி

அழுக்கில் கால் பதித்து

நடக்கும் பன்றிகளின்

கால் தடத்தில்

பாவம் படரவில்லை

அறிவுச் சுடர் ஏந்தி

பாசம் பரிவு சுயமரியாதை என

அத்துனை உணர்வையும் ஏந்திய

ஒரு மனிதனின் கால் தடம்

தீட்டென்று சொல்லி

தடத்தை அழித்து அழித்து

நடக்க செய்தாயே

இறைவன் இப்படி சிந்திப்பானா?

என நீ ஒரு முறை சிந்தித்துப்பார்

தடங்கள் அழிக்கபட்டு இருக்கலாம்

ஆனால் மனித மற்ற அநீதியின்

ஆழமான காயங்கள் இன்றும்

உயிரோடு உரக்க

பேசிக்கொண்டிருக்கிறது

- ஸ்டெல்லா இசக்கிராஜ்


Art by Stella Esakkiraj

2 views
This site was designed with the
.com
website builder. Create your website today.
Start Now