சில்லறை கூட்டம்
Updated: Jul 29, 2022

சிரமப்பட்டு
சிந்தனை தீட்டி கவனம் சிதறாமல் ஒருமுகப்படுத்தி என எத்தனை அழகாய் நீ வடிவமைத்தாலும் வக்கனையாக குறை சொல்லும் கூட்டம் நிச்சயமாக ஒரு சிலர் இருப்பர்
பற பற வென்று பறந்து பறந்து எத்தனையோ நாள் தூக்கம் இழந்து சிறுக சிறுக சேர்த்து வைத்து எத்தனை உயரம் நீ தொட்டிருந்தாலும் துரத்தித் துரத்தி சிறுமை படுத்த சில்லறை கூட்டம் கொஞ்சம் இருப்பர்
நீ எதைச் செய்தாலும் வம்புகள் பேச வீணர்க்கு இங்கு குறைவேயில்லை வம்பர் பேசும் வார்த்தைக்கெல்லாம் நீ இரசீது கொடுக்கத் தேவையுமில்லை ஓட ஓட நாயும் துரத்தும்
உன் ஓட்டம் முதலில் நிறுத்திப் பார் திரும்பி நின்று முறைத்துப் பார் -எதிரியின் கண்களில் பயத்தை விதைத்துப் பார் எளிதாய் எரியும் சருகைப் போல் எதிர்ப்புகள் மறையும் உன் கண்முன்னே
- ஸ்டெல்லா இசக்கிராஜ்