நீல நரி

நீல சாயம் பூசி
வலம் வரும்
நரிகளில் ஒன்றை
“நீ யார்” என்ற
கேள்வி கேட்டு
ஜோவென்று பெய்த மழை
மழையில் நனைந்த
நரிக்கு தன்னை
மறந்த நிலை
தன் உண்மை முகம்
காட்டி ஊரறிய ஊலையிட
முகத்தைப் பார்த்தப்பின்பும்
சத்தம் கேட்டப்பின்பும்
இன்னும் புரியலனா
உன்னை காப்பாத்தவே முடியாது
- ஸ்டெல்லா இசக்கிராஜ்