விஞ்ஞானிகளுக்கு ஒரு விண்ணப்பம்


கும்மிருட்டு ஆட்சியில் அமர்ந்து இருக்கையிலே சூரியன் மறையும் முன்னே  வேலை முடிக்கணும், பிறகு பாதை தெரியாது வேகம் வீடு போகணும் ஆனால் கண்ணாடி குடுவைக்குள் ஒளியைத் தேக்கி இரவைப் பகலாக்கிய அறிவு ஜீவிகளே  முன்பு புறாவை தூதுவிட்டு செய்தி சொன்னாங்க பின்பு கடிதம் எழுதி காத்திருந்தாங்க பக்கத்தில் அமர்ந்து பேசுவது போல் சிறு பெட்டிக்குள் குரல் அடைத்த திறமைசாலிகளே அண்டங்கள் தாண்டி போக பறவை பெட்டிகள் சந்திரனைத் தொட செய்த கணித யுக்திகள் தினம் தினம் கோடி கோடி கண்டுபிடிப்புகள் இப்படி அளவில்லா அறிவுகொண்ட விஞ்ஞானிகளே இந்த மீனவனின் விண்ணப்பத்தை கேளுங்க ராசா  தண்ணி மேல வேலி போட்டு எல்லை குறிக்கனும் அது இரவில் கூட தெரியும் வண்ணம் வெள்ளையடிக்கனும் இது எங்க பக்கம் அது உங்க பக்கம் எனப் பங்கு பிரிக்கணும் தமிழ் பேசும் மீனவனின் உயிரை காக்கணும் அப்படி ஒரு தொழில்நுட்பம் நீங்கக் கண்டு பிடிக்கணும் ஸ்டெல்லா இசக்கிராஜ் SHARE

0 comments

Recent Posts

See All