சுவர்
Updated: Jul 29, 2022

ஆதி மனிதன் சொன்னான்
கொடூர மிருகங்கள்
அலைகின்றன
சுவர் எழுப்ப வேண்டும்
சக மனிதர்களை
காப்பாற்ற வேண்டும்
நவீன மனிதன் சொல்கிறான்
நாம் கொடூர மிருகங்களாகிவிட்டோம்
மிகப் பெரிய சுவர்
எழுப்ப வேண்டும்
சக மனிதனை
கொன்று ஜாதியை
காப்பாற்ற வேண்டும்
-ஸ்டெல்லா இசக்கிராஜ்