மரணம்
Updated: Jul 29, 2022

மரணமே மனிதன் சந்திக்கும் முதல் முற்றுப்புள்ளியே உன்னை நேசிப்பதா இல்லை உன்னிடம் யாசிப்பதா தெரியவில்லை ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன் உன்னை யோசிப்பதால் எங்கோ சில மேகங்கள் விலகி எனக்குள் ஒளிக்கதிர்களை அடுக்கிச் செல்கின்றன மரணம் மரிக்கும் என்றால் பிறப்பும் சவமாகும் அச்சுறுத்தும் அச்சமே அர்த்தங்கள் சுவாசிப்பது உன்னால்தான் நீ இல்லை என்றால் அவைகளும் இல்லாமல் போயிருக்கும் ஏதோ ஒரு மூலையில் அனைவர்க்கும் தெரிந்தவன்தான் நீ ஆனால் ஏன் ஒரு மயான அமைதியை உனக்குள் புதைத்து மறைந்தே நிற்கிறாய்
-ஸ்டெல்லா இசக்கிராஜ்